Pongal Gift | TN Govt | தமிழக அரசின் ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகை - உங்களுக்கு வந்துடுச்சா?
தமிழகத்தில் நியாயவிலைக்கடைகளில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு, பொங்கல் ரொக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி வரை, 24 ஆயிரத்து 924 நியாயவிலை கடைகளில் உள்ள ஒரு கோடியே 11 லட்சத்து 61 ஆயிரத்து 979 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகையாக, 3 ஆயிரத்து 348 கோடியே 59 லட்சம் ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது