மதுரையில் நள்ளிரவில் பெண்ணை விசாரணைக்கு அழைத்த காவலர்கள் - வெளியான வீடியோ
மதுரையில் நள்ளிரவில் பெண்ணை விசாரணைக்கு அழைத்த காவலர்கள் - வெளியான வீடியோ
நிலப்பிரச்சனை தொடர்பாக பெண்ணை நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்த சம்பவம் மதுரை திருப்பரங்குன்றத்தில் அரங்கேறியுள்ளது. தனக்கன்குளத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் தன்னுடைய நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக அதே பகுதியை சேர்ந்த குமரேசன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3.40 மணியளவில் 10க்கும் மேற்பட்ட போலீசார், ஆய்வாளர் மதுரை வீரன் தலைமையில் சகாயராஜ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் வீட்டில் இல்லாத நிலையில், தனியாக இருந்த சகாயராஜ் மனைவி மேரியை பெண் காவலர்கள் இன்றி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.