வாக்கிங் சென்ற போலீஸ் அதிகாரி... சுருண்டு விழுந்து பலி - வேலூரில் அதிர்ச்சி

Update: 2025-08-14 12:11 GMT

வேலூரில் நடைபயிற்சி சென்ற காவல் துறை அலுவலக ஊழியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் சேவூரில் உள்ள காவல் துறையின் 15 வது பட்டாலியனில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். வேலூர் கோட்டையில் தினந்தோறும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட இவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்