பஹல்காம் தாக்குதல் -உச்சநீதிமன்றம் கருத்து

Update: 2025-08-14 13:53 GMT

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக், ஜம்மு என 2 யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஷாகூர் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜம்மு- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிசீலிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், ஏறத்தாழ 2 ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி, ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, அதனை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது என கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்