விபத்தில் மூளை சாவு அடைந்த ஓட்டுனரின் உடல் உறுப்புகள் தானம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில், மூளைச்சாவடைந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உடல் உறுப்பு தானம் செய்த ஓட்டுநரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆலங்குளம் அடுத்த மாராந்தை பகுதியைச் சேர்ந்த கணபதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆலங்குளம் அருகே மாராந்தை பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில், அவர் மூளைச் சாவடைந்தது உறுதியானதைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.