``இந்த ரயிலில் இனி பயணிகள் அசைவம் எடுத்து வர கூடாது’’ - ரயில்வே

Update: 2025-04-18 06:31 GMT

டெல்லி - கத்ரா இடையிலான வந்தே பாரத் ரயிலில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்வதற்கு ஏதுவாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயிலில் பயணிகளுக்கு சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் இந்த ரயிலில் அசைவ உணவு எடுத்து வரக்கூடாது என்றும், அசைவ உணவு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்