இறந்தும் 7 பேரை வாழவைத்த இளைஞர் - உடைந்து அழுத தாய்.. நெகிழ்ச்சி சம்பவம்

நாகை அருகே சாலை விபத்தில் உயிரிழந்து, உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தை சேர்ந்த வீரபாலன் என்பவர், கடந்த 23- ம் தேதி விபத்தில் படுகாயமடைந்து, 26ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது தாயார் சித்ராவின் அனுமதியுடன், வீரபாலனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கோட்டாட்சியர் எம்எல்ஏ உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com