வைகை ஆற்றில் வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு | Madurai HC | Vaigai River

Update: 2025-02-08 02:24 GMT

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக, மதுரை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள் வாரந்தோறும் ஆய்வு செய்து, 40 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகராஜன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, 5 மாவட்ட ஆட்சியர்கள், வைகை ஆற்றில் வாரந்தோறும் ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்