🔴LIVE : Today Headlines | காலை 10 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2025) | 10 AM Headlines | ThanthiTV
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது... ஒரு சவரன் தங்கம் 91 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.... அமைச்சரின் அறிவிப்பையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...
- 2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, இன்று நடைபெறுகிறது... சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் 90 கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்...
- சென்னை, மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி சேகர் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது....எஸ்.வி.சேகர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்....
- நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி விஷ மருந்திய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்... போலீஸ் பாதுகாப்புடன் கைதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது....