கோவை மாவட்டத்தில், குழந்தையின் சடலத்தை தண்டவாளத்தில் வீசியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர் ரயில்வே பாலம் அருகே குழந்தையின் சடலம் கிடப்பதாக போத்தனூர் ரயில் நிலைய மேலாளர் போலீசில் புகார் அளித்தார். சடலத்தின் அருகில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி மற்றும் மசாலா பொடிகள் கிடந்தன. சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் பிரிவின் உதவியுடன் சந்தேக நபர்களான 6 பேர் கைது செய்யப்பட்டனர். மரியலூயிஸ், ராதாமணி என்பவர்கள் மகாராஷ்டிராவில் குழந்தையைத் தத்தெடுத்ததாகவும், கடந்த 13ம் தேதி கோவை கொண்டு வந்த குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து, அதனை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டதாகவும், சம்பிரதாயமாக கருப்புக்கோழி அறுத்து மசாலா பொடிகளை தூவியதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.