எதிரில் இருப்பது யாரென்று தெரியாத அளவிற்கு கொடைக்கானலை மூடிய பனி | Kodaikanal | Snow Fall
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 2வது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டத்துடன் ,லேசான சாரல் மழை பெய்தது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று அடர்ந்த பனிமூட்டத்துடன் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று காலை முதலே வத்தலக்குண்டு ,அண்ணா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை மிளிர விட்டபடி சென்றனர். அதே போன்று பனிமூட்டம் காரணமாக நட்சத்திர ஏரி படகு குழாம்களில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.