Kerala Sabarimala Temple | கேரள சட்டப்பேரவையை உலுக்கிய சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்

Update: 2025-10-06 08:32 GMT

Kerala Sabarimala Temple | கேரள சட்டப்பேரவையை உலுக்கிய சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்

சபரிமலை விவகாரம்- சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி

சபரிமலை துவாரபாலகர் பீட தங்க கவசத்தில் 4 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்னையைக் கிளப்பி கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சபரிமலை துவாரபாலகர் பீட தங்க கவசத்தை பராமரிப்பு பணிக்காக சென்னைக்கு கொண்டு சென்றபோது 4 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுகிறது. இதில் நீதி விசாரணை கோரி கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி, அவையின் மைய பகுதியில் திரண்டு கூச்சலிட்டனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விளக்கமளித்த போதிலும், பேரவைத் தலைவர் அருகே காங்கிரஸ் உறுப்பினர்கள் திரண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கையில் இடையூறு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்