Karur Stampede | கோர்ட்டுக்கு வந்ததும் நீதிபதி கேட்ட மிக முக்கிய கேள்வி - கையோடு அதிரடி உத்தரவு
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கைதான தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், 2 நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, விசாரணையின்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர், துன்புறுத்தினார்களா என மதியழகனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என்று மதியழகன் பதில் அளித்தார். பின்னர் வருகிற 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் மதியழகன் இருக்க வேண்டும்... அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.