``அது நான்தான்.. என்னிடம் ஆதாரம் இருக்கு’’ தவெக விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு
"மதுரை தவெக மாநாட்டில் ரேம்ப் மேலே ஏறியது நான்தான்"
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக பெரம்பலூர் இளைஞர், தனது தாயாருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், அந்த ரேம்ப் மேலே ஏறியது தான் தான் என விழுப்புரம் மாவட்ட இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். திருக்கோயிலூர் வட்டம், சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர், சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக புகார் அளிக்கவில்லை என்றும், பொய் புகார் கொடுப்பவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.