இஸ்ரோவுக்கான செமி கண்டக்டர் சிப்புகளை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிப், கர்நாடகாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தொகுக்கப்பட்டது. ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தில் ஐஐடி மெட்ராஸ்- இஸ்ரோ இணைந்து உருவாக்கியுள்ள இந்த செமிகண்டக்டர் சிப்புகள் செமிகண்டக்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.