"அப்பா ஓகே சொன்னா நான் நடிக்க ரெடி" - ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்

Update: 2025-05-24 07:32 GMT

அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தான் தயார ஆக உள்ளதாகவும், அவர் சம்மதித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க ரெடி தான் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய ஸ்ருதிஹாசன் , நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாக ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்