Hosur ADMK Murder | பெண்ணை சந்தித்துவிட்டு திரும்பியபோது.. வெட்டி சரிக்கப்பட்ட அதிமுக புள்ளி
பெண்ணை சந்தித்துவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த பயங்கரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட சமப்வம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரண்டப்பள்ளி அடுத்துள்ள மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். அதிமுக உறுப்பினரான ஹரிஷ், வானவில் நகரில் குடியிருக்கும் பெண் ஒருவரை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்றிரவு, அந்த பெண் வீட்டிற்கு சென்ற ஹரிஷ் உணவு சாப்பிட்டுவிட்டு மாரசந்திரம் கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள், வானவில் நகர் அடுத்துள்ல ஒதுக்குப்புறமான இடத்தில் ஹரிஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ஹரிஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணை சந்தித்துவிட்டு திரும்பிய வழியில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.