"பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு தர வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை
ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின மக்களுக்கு வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பஞ்சமி நிலம் குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.