தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிதாக மேலும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 500 துணை சுகாதார நிலையங்களும் வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.