அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்து-ஆட்டோ டிரைவர் பலி
ராமநாதபுரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுனரான மாரிமுத்து என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.