நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பாபநாசநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டு காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்லவும், அகஸ்தியர் அருவிக்கு சென்று குளிப்பதற்கும் வனத்துறையினர் 2 நாட்கள் தடை விதித்திருந்தனர்... குடமுழுக்கு நிறைவடைந்த நிலையில் மீண்டும் அகஸ்தியர் அருவியில் குளிக்கவும், கோவிலுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகைதந்து அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.