செப்டம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில் - வரிகள் குறைய வாய்ப்பு!
டெல்லியில் வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், நடைமுறையில் உள்ள 12 மற்றும் 28 சதவிகித வரிகளை, 5 மற்றும் 18 சதவிகிதங்களாக குறைப்பது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, இறுதி ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.