நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசுபேருந்தின் சக்கரம் கழன்று விழுந்த சம்பவத்தில் வீல் பேரிங்கை முறையாக சரிசெய்யததால் தொழில்நுட்ப பணியாளர்கள் 4 பேர், மற்றும் மேற்பார்வையாளர்கள் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே அந்த பேருந்து சென்றபோது, திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று சாலையோரம் விழுந்தது. சம்பவம் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள், பேருந்தின் சக்கரத்தை சரிசெய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், வீல் பேரிங்கை முறையாக சரி செய்யாத 7 பேரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மண்டல இயக்குனர் உத்தரவிட்டார்.