GOAT vs GOAT மெஸ்ஸியை தொடர்ந்து இந்தியா வரும் ரொனால்டோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்
AFC சாம்பியன்ஸ் லீக் 2 குரூப் ஸ்டேஜ் போட்டியில் கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணி, எஃப்சி கோவா அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாட உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. ஏற்கனவே வருகின்ற டிசம்பர் மாதம் மற்றொரு கால்பந்து ஜாம்பவானாக லயனோல் மெஸ்ஸி இந்தியா வருகை தர இருப்பதாக செய்தி வெளியாக இருந்த நிலையில், தற்போது
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் இந்த கால்பந்து போட்டியில் ரொனால்டோ விளையாடுவாரா ? என்று கால்பந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் வெளிநாட்டுப் போட்டிகளுக்காக அவர் மேற்கொள்ளும் பயணம் குறித்த காண்ட்ராக்டில் சில கட்டுப்பாடுகள் உள்ளதால் இந்தியாவில் ரொனால்டோ விளையாடுவாரா? என்பது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது.