திருவாசகத்தின் முதல் பாடல் - யூடியூப்பில் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில், திருவாசகம் பாடலின் ஒரு பகுதியை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றினார். பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியான நிலையில், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.