Doctor angry issue| விபத்தில் சிக்கிய சிறுவன்.சிகிச்சை அளிக்காமல் விரட்டிய டாக்டர்.அதிர்ச்சி வீடியோ
விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கிளினிக் நடத்தி வரும் அரசு மருத்துவர், விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறி, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர் அடுத்த சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சிவக்குமார் விபத்தில் காயமடைந்த நிலையில், அங்குள்ள தனியார் கிளினிக் ஒன்றுக்கு பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர் வடிவேல், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்