மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதரான தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி சம்பளம்
மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக உள்ள நடிகை தமன்னாவுக்கு, 6 கோடியே 27 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது..
பிரபலமான மைசூர் சாண்டல் சோப்பை கர்நாடகா அரசு, அதன் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறது. இதன் வர்த்தகத்தை பெரிதாக்கும் விதமாக கடந்த வருடம் நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கபட்டார்.
இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜக எம்எல்ஏ , மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்கான செலவு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கர்நாடகா அரசு, நடிகை தமன்னாவுக்கு 6 கோடியே 27 லட்சம் ரூபாய் சம்பளமாகவும், மொத்தமாக 56 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.