Yercaud | தீயாய் பரவிய டேஞ்சர் வீடியோ.. ஏற்காட்டை பதற வைத்த வெளிநாட்டு நபர்.. திக் திக் சம்பவம்

Update: 2025-12-03 12:05 GMT

ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் அருகே மலைவாச ஸ்தலமாக விளங்கும் ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்றே அழைக்கப்படுகிறது. பசுமையான மலையில் இயற்கை அழகை ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஏற்காடு மலைப்பாதையில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்