பாஜக கூட்டணியின், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருடைய சொந்த ஊரான திருப்பூரில், அவருடைய தாயார் ஜானகியம்மாள், பொதுமக்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது, முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல் வரவேண்டும் என எண்ணி, அந்த பெயரை தனது மகனுக்கு சூட்டியதாக அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.