தொடர்பில் இருந்த பெண்ணை அப்படி சொல்லி திட்டியதாக புகார் - அதிமுக புள்ளி கைது

Update: 2025-06-19 03:24 GMT

ஈரோட்டில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பெண் அளித்த புகாரில், அதிமுக நகர செயலாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளரான ஜி.கே. மூர்த்தி என்பவர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ உடன் அந்த பெண் புஞ்சை புளியம்பட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மூர்த்தியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்