போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம், கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.