பல் மருத்துவமனையை விரிவுப்படுத்த பணம் வாங்கி மோசடி செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருக்கு தோழி மூலம் ஆழ்வார் திருநகர் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வரும் ஹரிஸ் வெங்கடேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் தனது மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாக கூறி, 40 லட்சம் ரூபாய் கடன்பெற்று மாதம் ஒரு லட்சம் வீதம் 60 மாதங்கள் தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்துள்ளார். இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்த நிலையில் விசாரணையில் ஹரிஷ் வெங்கடேஸ்வரன் பணம் மோசடி செய்தது அம்பலமானது.