ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு கடந்த ஆறாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதாக புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சிறைத்துறை அதிகாரிகளிடம், காவல்துறையினர் ஒப்படைத்தனர்.