Chennai | Airport | Flight | ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் - சென்னையில் பரபரப்பு
ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு
சென்னையில் இருந்து, மும்பைக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு முன்னதாகவே, அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர், விமானம் சுமார் 9 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.