FIITJEE பயிற்சி மையத்தில் IIT மற்றும் JEE தேர்வுகளுக்காக பினாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த என்ற இரு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சியில் சேர்ந்த சுமார் 191 மாணவர்களின் பெற்றோர்கள் அப்பயிற்சி மையத்தில் பயிற்சி காலத்திற்கான முன்பணம் மற்றும் EMI தொகைகளை கட்டி வந்த நிலையில், இந்த வருடம் தொடக்கம் முதலே FITJEE நிறுவனமானது பல மோசடி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்த தரமான கல்வியை அளிக்காமலும் திடீரென பயிற்சியை நிறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் FIITJEE பயிற்சி மைய தமிழ்நாடு மண்டல தலைவர் அங்கூர் ஜெயின் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.