தென்காசி மாவட்டம் கடையம் அருகே, டாஸ்மாக் கடையில் சிகரெட் கேட்டதில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மது பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடைச்சாணி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது நண்பருடன் துப்பாக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது அருகிலிருந்த மூவர் சிகரெட் கேட்டதற்கு மறுத்ததால், மாரிமுத்துவை மது பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளனர்.