#BREAKING || Metro | அடுத்த மாதம் முதல்.. எதிர்பார்த்து காத்திருந்த சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்
வடபழனி-பூந்தமல்லி இடையே அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மெரினா முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடபழனி முதல் பூந்தமல்லி வரை 16 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இம்மாத இறுதியில் வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு சோதனை நடத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டம் மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.