மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் - கதறி அழுத தாய்

மதுரையில் காவலர் பணி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் சாலை விபத்தில் மூளை சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த வினோத்குமார், மூணாறில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால், வினோத்குமாரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானாமாக அளித்தனர். அப்போது, வினோத்குமாரின் தாயார் பாண்டி செல்வி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com