Banana | சிறுவனின் உயிரை எடுத்த வாழைப்பழம் - பெற்றோர்களே உஷார்..! அலர்ட் கொடுக்கும் மருத்துவர்

Update: 2025-12-03 12:18 GMT

ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த மாணிக்கம் - மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரன் நேற்றிரவு வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சிக்கியதால், சிறுவன் சாய்சரண் மூச்சு விட முடியாமல் அவதியடைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவன் சாய் சரனை உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுவிட முடியாமல் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வாழைபழத்தையும் மருத்துவர்கள் அகற்றினர். குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை கொடுக்கும் போது சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுக்க வேண்டும் என்றும் மூச்சுக்குழாயில் இதுபோன்று உணவு சிக்கிக் கொண்டால் குழந்தையை தலைகீழாக திருப்பி, முதுகு பகுதியில் தட்டிவிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்