பிப்ரவரி 1 முதல் உயரப்போகும் கட்டணம் - மக்களுக்கு ஷாக் நியூஸ்

Update: 2025-01-28 15:33 GMT

வரும் பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 2013-ல், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 12 ஆண்டுகளுக்கு பின்னர் பயண கட்டணத்தை உயர்த்தி ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பயண கட்டணத்தை உயர்த்துவதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர். அதன்படி, முதல் 2 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 18 ரூபாய் கூடுதல் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒன்றரை ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசு தரப்பில் இந்த புதிய கட்டணத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்