கோவை செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஜ்கமல், ரெட் ஜெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் கமலுடன் சேர்ந்து படம் நடிக்க ஆசை என்றும், அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..