Kanchipuram Crime | திருடிய பைக்கிலேயே சென்று திண்ணக்கமாக வழிப்பறி - காஞ்சியில் பரபரப்பு
வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் விலையுயர்ந்த கேடிஎம்(KTM) பைக் திருடு போன நிலையில், இது குறித்து அவர் படப்பை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் KTM பைக்கில் வந்த இருவர் தன்னை மிரட்டி ஜி-பே மூலம் பணம் பறித்ததாக மகேந்திரன் என்பவர் அதே காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இரு வேறு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொண்ட போலீசார், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த மணிமாறனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மணிமாறன் தனது நண்பனுடன் சேர்ந்து பைக்கை திருடியதும், அதே பைக்கை வைத்து சாலையில் நடந்து சென்ற மகேந்திரனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மணிமாறன் மற்றும் அவரது நண்பன் தனசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் பைக்கை மீட்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்.