பேருந்துக்கு அடியில் சிக்கிய மாடு- 2 மணி நேரம் போராடி மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், அரசு பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்ட பசு மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து பின்னோக்கிச் சென்றபோது, சாலையில் படுத்திருந்த பசுமாடு, பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டது. வெளியே வரமுடியாமல் தவித்த அந்த பசுவை, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பத்திரமாக மீட்டனர்
Next Story
