ராமநாதபுரம் அருகே பாம்பு கடித்து +2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான லட்சுமி என்பவரது மகள் கௌரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்த நிலையில் மாணவியின் தாய் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.