ஜூன் 5-ல் TNPL 9வது சீசன் தொடக்கம் - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை
ஜூன் 5-ஆம் தேதி கோவையில் தொடங்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) 9-வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதில், கோவை மற்றும் சேலத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் தொடங்கின. நெல்லையில் நடந்த TNPL அறிமுகக் கூட்டத்தில் பேசிய TNPL சிஇஒ பிரசன்னா கண்ணன், இது குறித்து அறிவித்தார். அப்போது பேசிய அவர், TNPL தமிழ்நாட்டு வீரர்களுக்குப் பெரிய வாய்ப்புகளை அளித்துள்ளதாகவும், இதன் மூலம் பலர் அடுத்த நிலைக்குச் சென்றுள்ளதாகவும் கூறினார். TNPL முதல் போட்டி ஜூன் 5-ம் தேதி கோவையில் தொடங்குகிறது. பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிகள் ஜூன் 29-ல் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளன. ஜூலை ஒன்றாம் தேதி முதல் தகுதி சுற்றும் 2ம் தேதி எலிமினேட்டர் போட்டியும், ஜூலை 4 ஆம் தேதி 2வது தகுதி சுற்றும், ஜூலை 6 ஆம் தேதி டிஎன்பிஎல் 9வது சீசனின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக 6 இரட்டை ஆட்டங்கள் நடைபெற உள்ளன.