இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய மீராபாய் சானு

Update: 2025-08-26 02:48 GMT

குஜராத் மாநிலம், அகதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள், அகமதபாத்தில் திங்கள்கிழமை தொடங்கி உள்ளது. போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். அதைத் தொடர்ந்து, 193 கிலோ எடையை தூக்கி அவர் மகுடம் சூடியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்த மீராபாய் சானு, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்