இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளின் முடிவில் 2-க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. எனவே இந்திய அணி ஒரு பெரிய மாற்றத்தை செய்தாக வேண்டும். இல்லையென்றால், டிரா தான் செய்ய முடியும் என்ற நிலைமை இருக்கிறது. கடைசிப் போட்டியில் வென்று ஆண்டர்சன் -டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து சொந்த மண்ணில் வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.