சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் Story வைரலாகி வருகிறது. அதில் சி.எஸ்.கே. நட்சத்திர வீரர் தோனி உடன் தாம் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள ஜடேஜா, எல்லாம் மாறும் என பொருள்படும் things will change என்று பதிவிட்டுள்ளார். இது சி.எஸ்.கே அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.