பும்ரா விளையாடாவிட்டால் அர்ஷ்தீப்பை களமிறக்குங்கள் - ரகானே
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாவிட்டால், இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கும் இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் கேப்டன் ரஹானே Rahane வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னரே இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 3 போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இப்படி இருக்க அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒருவேளை பும்ரா விளையாடாவிட்டால், பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கிய ரஹானே Ajinkya Rahane குரல் கொடுத்துள்ளார்.
மேலும், குல்தீப் யாதவை நிச்சயம் அணியில் விளையாட வைக்க வேண்டும் எனவும், நிச்சயம் விக்கெட் எடுக்கும் பவுலர்கள் இந்திய அணிக்கு தேவைப்படுவதாகவும் ரஹானே குறிப்பிட்டுள்ளார்.