"நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும்" - நயினார் வலியுறுத்தல்
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், அரக்கோணம் பாலியல் வழக்கு, அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு, அயனாவரம் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மீதான கூட்டு பாலியல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான விசாரணைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.